இசைஞானி கொடுத்த அல்டிமேட் அப்டேட்! 2-வது சிம்பொனி பணிகளை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது!இளையராஜா அறிவிப்பு
The ultimate update from the musician The work on the 2nd Symphony is nearing completion Ilayaraja announcement
இசைஞானி இளையராஜா, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனது புதிய இசைப்பதிவுக் கூடத்தில் ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதோடு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இரண்டாவது சிம்பொனி இசைக்கோர்வையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாக திகழும் இளையராஜா, பல தசாப்தங்களாக இயங்கி வந்த பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறி, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோடம்பாக்கத்தில் தனது சொந்த புதிய ஸ்டூடியோவை தொடங்கினார். அந்த புதிய இசைப்பதிவுக் கூடத்திற்கு குடிபெயர்ந்தது இன்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் பல முக்கிய திரைப்படங்களுக்கு இசை அமைத்து, இளையராஜா தனது படைப்பாற்றலை இங்கிருந்து தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த முக்கிய தருணத்தில், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது இரண்டாவது சிம்பொனி இசைக்கோர்வையின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1993ஆம் ஆண்டு, ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு சிம்பொனி இசைக்கோர்வையை உருவாக்கிய பெருமை இளையராஜாவுக்கு உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகும் இந்த இரண்டாவது சிம்பொனி, உலக இசை அரங்கில் மீண்டும் தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் இளையராஜா, “புதிய ஸ்டூடியோவிற்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. சிம்பொனி 2-ன் வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். 80 வயதை கடந்தும் குறையாத ஆர்வத்துடனும், தொடரும் இசைத் தேடலுடனும் அவர் உருவாக்கி வரும் இந்த சிம்பொனி, நவீன தொழில்நுட்பமும் ஆன்மீக உணர்வும் கலந்த ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பாக அமையும் என இசை விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
The ultimate update from the musician The work on the 2nd Symphony is nearing completion Ilayaraja announcement