நிலநடுக்கமா என அச்சம்…? அரசு விளக்கத்தில் உண்மை வெளிச்சம்...! - Seithipunal
Seithipunal


சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை திடீரென வானில் இருந்து வந்த அதிர்ச்சி தரும் பெரும் சத்தம், பொதுமக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் ‘நில அதிர்வு ஏற்பட்டதா?’ என்ற சந்தேகத்துடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாக பரவி, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கின.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் சமூக ஊடக தகவல் சரிபார்ப்பகம் உண்மை நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கத்தின் படி, காலை 10.20 மணி முதல் 10.30 மணி வரை கேட்ட அந்த சத்தம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ‘ஜெட்’ விமானத்தின் அதிவேக ஒலி மட்டுமே எனவும், நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு போன்ற எந்த இயற்கை பேரிடரும் ஏற்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி, வதந்திகளை பகிர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fear earthquake truth comes light government explanation


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->