ஜனநாயகன் 20 நிமிட சீன் கட்டா?.. ஜனநாயகன் பட ரிலீஸ் குறித்து பரவும் தகவல்கள்: தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம்
Janyayan 20 minute scene cut Rumors circulating about the release of Janyayan Producer Dhananjayan explains
ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு சாதகமான தீர்ப்பு வரப்போகிறது என்றும் கடந்த வாரம் தீர்ப்பு வருவதற்கு முன்பே தவெக தரப்பினர் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவுகள் பகிர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்திலிருந்து வெளியான உண்மையான தீர்ப்பு எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து, ஜனநாயகன் படக்குழுவுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் கேவிஎன் தரப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், படத்தின் 20 நிமிட காட்சிகளை வெட்டி நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும், பிப்ரவரி 13-ம் தேதி படம் உறுதியாக வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் புதிய வதந்திகள் பரவத் தொடங்கின. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட “இது உண்மையா?” என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் சுத்தமான பொய் செய்தி என தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தெளிவாக மறுத்துள்ளார். ஜனநாயகன் படத்தைச் சுற்றி நீதிமன்ற வழக்கு தொடரும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையும் தணிக்கை குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைய சூழலில் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மேலும், வழக்கை வாபஸ் பெற கேவிஎன் நிறுவனம் தயாராக இல்லை என்றும், தணிக்கை குழுவின் நிர்பந்தங்களுக்கு உடன்பட முடிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படத்தின் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது எனவும், தயாரிப்பாளர் தரப்பு எந்தத் தணிக்கைத் திட்டத்தையும் இதுவரை இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஜனநாயகன் படத்தின் வெளியீட்டைச் சுற்றி திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த தகவலையும் நம்ப வேண்டாம் என்பதே தயாரிப்பாளர் தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.
English Summary
Janyayan 20 minute scene cut Rumors circulating about the release of Janyayan Producer Dhananjayan explains