தனுஷ் – மிருணாள் தாகூர் காதல் வதந்திகள்! தனுஷுடனான உறவு முறை..ஓபனாக போட்டுடைத்த மிருணாள் தாகூர்!
Dhanush Mrunal Tagore love rumors Mrunal Tagore opened up about her relationship with Dhanush
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில வாரங்களாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை மிருணாள் தாகூர் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்திருந்த தனுஷ், சில காரணங்களால் அவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்தார். இரண்டு மகன்களின் பெற்றோராக இருவரும் தற்போது கோ-பேரண்ட்டிங் முறையில் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் மீண்டும் திருமணம் செய்ய உள்ளார் என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்தாலும், அவை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அந்த நட்பு காதலாக மாறியுள்ளதாகவும் கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. சமூக வலைதளங்களில் தனுஷின் சகோதரிகளை மிருணாள் பின்தொடர்வதும், அவர்களும் மிருணாளை பின்தொடர்வதும் இந்த வதந்திகளுக்கு மேலும் தீவனம் போட்டது. அதேபோல், இருவரும் ஒரே இடத்தில் இருந்ததாக கூறப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி, இந்த பேச்சுகள் மேலும் தீவிரமடைந்தன.
தொடர்ந்து பரவி வந்த இந்த கிசுகிசுக்கள் குறித்து தற்போது மிருணாள் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் பரவும் தகவல்கள் அனைத்தும் பொய். அவற்றிற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தனுஷ் எனக்கு எப்போதும் ஒரு சகோதரர் போன்றவர் மட்டுமே. எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான உறவுதான்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம், தனுஷ் – மிருணாள் தாகூர் காதல் மற்றும் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன. இனி இதுபோன்ற கிசுகிசுக்கள் ஓயும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
English Summary
Dhanush Mrunal Tagore love rumors Mrunal Tagore opened up about her relationship with Dhanush