மத்திய பட்ஜெட் 2026! தங்கம் ஏறி இறங்கும் காரணம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வு மற்றும் மத்திய பட்ஜெட் முன்னுரிமைகள் குறித்து விளக்கினார்.அவர் கூறியதாவது, "இந்த பட்ஜெட் முதலீட்டை முக்கிய கருவியாக எடுத்துக்கொண்டு நுகர்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கத்தின் விலை உயர்வு மற்றும் இறக்கம் தெளிவாக காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் எந்த நாணயத்திலும் நம்பிக்கை இல்லாததால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். இதனால் பல மத்திய வங்கிகள் கூட தங்கத்தில் முதலீடு செய்கின்றன," என தெரிவித்துள்ளார்.

மேலும், யூகபேர்வணிகத்தில் பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கும் விளக்கம் அளித்தார். "இந்த வர்த்தகத்தில் குழந்தைகள் பெரும் நஷ்டம் அடைகிறார்கள். பெற்றோர்கள் அதனால் கவலைப்பட்டு, அரசிடம் தடுப்புக்கான நடவடிக்கை கோரினார். அதற்காக வரி உயர்த்தப்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.

நிதி பற்றாக்குறையை 4.3 சதவீதம் குறைக்கும் இலக்கோடு, வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்கு விற்பனை மற்றும் சொத்து மாற்றம் தொடரும், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனை ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, ஐ.டி.பி.ஐ. வங்கி பங்கு விற்பனைக்கு ஏற்பாடுகள் நடத்தியுள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்பு மற்றும் வருமான வரி விலக்கு காரணமாக தனிநபர் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், வரும்த் மாதங்களிலும் நுகர்வு தொடர்ச்சியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Budget 2026 reason fluctuations gold prices Nirmala Sitharaman explanation


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->