பிரதமர் பயணம் உறுதி: ரங்கசாமியுடன் 2 மணி நேர ஆலோசனை, முக்கிய அறிவிப்புகள் வரவிருக்கின்றன...! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் அரசுத் திட்டங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக வருவது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து 15-ந்தேதி தமிழகத்திற்கு வரும் அவர், மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்தை அடைகிறார்.

அதனைத் தொடர்ந்து, விமான நிலையம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாடு மற்றும் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், பிரதமரின் பயணத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி அறிவிப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister visit confirmed Two hour consultation Rangasamy important announcements expected


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->