காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை - சென்னையில் சோகம்.!!
women sucide for boy friend died in chennai
சென்னையில் உள்ள திருவொற்றியூர் தியாகி சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்கள் கணேசன்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மூத்த மகள் சரோஜினி தேவி கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருடைய காதலன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24-ந்தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சரோஜினி தேவியை அவரது பெற்றோர், வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சரோஜினி தேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சரோஜினி தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women sucide for boy friend died in chennai