ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் - வட்டாட்சியர் இடமாற்றம்.!!
rdo transfer for ungaludan stalin petitions float vaigai river
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆரம்பமானது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு பாக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வந்தது.
அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
rdo transfer for ungaludan stalin petitions float vaigai river