திருவண்ணாமலையா? அருணாச்சலமா? மாவட்டத்தின் பெயரை யார் மாற்றியது? சர்ச்சையும், விளக்கமும்!
thiruvannamalai arunachalam name issue govt bus
திருவண்ணாமலைக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளில் திருவண்ணாமலை என்ற பெயரை அருணாச்சலம் என மாற்றி எளியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உலக புகழ்பெற்ற திருவண்ணாமலையின் பெயரை 'அருணை' என எ.வ.வேலு மாற்றியுள்ளார்.

தனது கல்லூரி பெயரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டத்திற்கே வைத்து தனது அதிகார பலத்தை காட்டியுள்ளார் அமைச்சர் வேலு! ஸ்டாலின் ஆட்சியில் திருவண்ணாமலை மட்டும் 'Out of control'-ல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதேபோல் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், "பலகையின் பெயர் இப்போது 'திருவண்ணாமலை' என்று திருத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலைக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் ஒரே மாதிரியான (திருவண்ணாமலை) பெயர்களை உறுதி செய்ய அனைத்து டிப்போக்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
English Summary
thiruvannamalai arunachalam name issue govt bus