2025 -ஆம் ஆண்டுக்கான பெரியார் நினைவு 'வைக்கம் விருது'; தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிப்பு..!
Thenmozhi Soundararajan to receive Vaikom Award for 2025
2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் 'வைக்கம் விருது' அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தீவிரமாக பரப்புரை செய்து வரும் இவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சமூக நீதிக்கான வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்து இருந்தார். அதன்படி, பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்ட ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு இந்த விருது அளிப்பபடுகிறது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது கன்னட எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Thenmozhi Soundararajan to receive Vaikom Award for 2025