'2045க்குள் விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் விரும்பியே வசிப்பார்கள்': தொழிலதிபர் ஜெப் பெஜோஸ்..! - Seithipunal
Seithipunal


உலகின் 03 வது பெரும் கோடீஸ்வரர், அமேசான் நிறுவனர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஜெப் பெஜோஸ், இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; 

அடுத்த ஓரிரு தசாப்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள். இது வேகமாக நடக்கப்போகிறது. இது தேவை காரணமாக நடக்காது. ஆனால், மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலவின் தரைபரப்பு அல்லது வேறு எங்கும் பணியாற்றுவதற்கு ரோபோக்களை அனுப்பி வைக்க முடியும். அது மனிதர்களை அனுப்புவதைக் காட்டிலும் செலவு குறைந்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் எனக்கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெப் பெஜோஸ் கூறுகையில்; நமது கண்டுபிடிப்புகளில் இருந்தே நாகரிக வளர்ச்சி வருகிறது என்றும், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு முன்பு யாரோ ஒருவர் கலப்பையை கண்டுபிடித்தார்.

இதனால், நாம் அனைவரும் பணக்காரர்கள் ஆனோம் என்றும், தான் அனைத்து நாகரிகங்களை பற்றி பேசுகிறேன். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை நமது வளர்ச்சியை ஆதரிக்கின்றன, அதனால் அந்த முறை தொடரும் என்றும் ஜெப் பெஜோஸ் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jeff Bezos predicts that millions of people will be living in space by 2045


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->