“பெயர் மாற, அதிர்ஷ்டம் மாறியது!” -உண்மையான பெயரை வெளிப்படுத்திய ரிஷப் ஷெட்டி அதிர்ச்சி தகவல்...!
Change your name change your luck Shocking news Rishabh Shetty reveals his real name
இப்போது ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த பெயர் 'ரிஷப் ஷெட்டி'. ஆனால், அது அவரது உண்மையான பெயர் அல்ல என்பதுதான் ஆச்சர்யம்.தற்போது “காந்தாரா: சப்டர் 1” படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் ரிஷப், தனது பெயர் மாற்றத்தின் பின்னாலுள்ள ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது,“என் பிறப்புப் பெயர் பிரசாந்த் ஷெட்டி. அந்த பெயரில்தான் நான் சினிமாவில் கால் வைத்தேன். ஆனால் அப்போது என்னை நோக்கி வெற்றியும், வாய்ப்புகளும் வரவே இல்லை” என அவர் நினைவுகூர்ந்தார்.
அந்த நேரத்தில், தந்தை ஒரு முக்கிய ஆலோசனையுடன் வந்தாராம் “பெயரை மாற்று… அதனால் அதிர்ஷ்டம் மாறும்!” என்றார்.இதையடுத்து, ரிஷப், பிரசாந்த் என்பதிலிருந்து ரிஷப் என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
மேலும், “திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்கள் பெயரை மாற்றிய பின் வெற்றி கண்டதாக கேட்டிருந்தேன். எனவே நானும் ஒரு வாய்ப்பு எடுக்க நினைத்தேன்,” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
English Summary
Change your name change your luck Shocking news Rishabh Shetty reveals his real name