இன்று அதிகாலையில் 4 ரவுடிகளை சுட்டு கொன்ற போலீசார்! பெரும் சதித்திட்டம் முறியடிப்பு!
delhi police encounter Bihar rowdy gang
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுன்டரில் பிகாரைச் சேர்ந்த நான்கு ரெளடிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பிகாரின் பிரபல கும்பல் தலைவரான ரஞ்சன் பதக்கின் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பெரிய அளவிலான குற்றச்செயலை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் வழங்கியதையடுத்து, பிகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து விசேட நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாலை 2.20 மணியளவில் ரோஹினி பகுதியில் சந்தேக நபர்களை சோதனை செய்ய முயன்றபோது, நால்வரும் காவல்துறையின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்கூர் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ரோஹினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரும் பிகாரில் பல கொலை வழக்குகள், ஆயுதக் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
என்கவுன்டர் நடைபெற்ற இடம் டெல்லி மற்றும் பிகாரைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
English Summary
delhi police encounter Bihar rowdy gang