பாலிவுட்டின் 'ராமாணா' படத்தில் விஜய் சேதுபதியா...? - வைரலான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
Vijay Sethupathi Puts end viral information Bollywood Ramayana
தமிழ் சினிமாவைத் தாண்டி பான் இந்தியா அளவில் தனக்கென தனி அடையாளம் பதித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, கதாபாத்திரங்களின் தேர்வில் எப்போதும் வித்தியாசத்தை தேடும் கலைஞராக ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் என எந்த வேடமாயினும் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவரும் இவர், தற்போது ‘டிரெய்ன்’ மற்றும் ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மேலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது படத்தொடர்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர்-சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட புராணக் காவியம் ‘ராமாயணா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைவார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அதிலும் குறிப்பாக, ராவணனின் சகோதரர் விபீஷணன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி, “அந்த படத்தில் நான் நடிக்கவில்லை.
இப்படியான தகவல் எப்படி பரவியது என எனக்கே தெரியவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது இந்த விளக்கம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vijay Sethupathi Puts end viral information Bollywood Ramayana