மனைவியின் ரகசிய அழைப்பு பதிவுகளை ஆதாரமாக பயன்படுத்தலாம் – விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
The wifes secret call recordings can be used as evidence Supreme Court ruling in divorce case
விவாகரத்து வழக்குகளில் மனைவியின் அனுமதியின்றி பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சாட்சி ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த கணவர் ஒருவர், தம்மை மனைவி இழைத்த கொடுமையை நிரூபிக்க ரகசியமாக பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாகக் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். இதை அங்குள்ள குடும்ப நீதிமன்றம் ஏற்று, அவற்றை சாட்சியமாக எடுத்துக்கொள்ள அனுமதித்தது.
அதை எதிர்த்து, மனைவி உயர்நீதிமன்றத்தை அணுகி,"இது என் அனுமதியின்றி பதிவு செய்யப்பட்டது"
"தனியுரிமை மீறல்" என்ற காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் பேரில் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம், இந்த உரையாடல்களை சாட்சியாகப் பயன்படுத்த முடியாது எனத் தீர்ப்பு வழங்கியது. ஆனால் தற்போது, இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் கூறியது:
"ஒரு திருமண உறவு, வாழ்க்கைத் துணையிடம் சந்தேகம் கொண்டு உளவு பார்க்கும் நிலைக்கு சென்றுவிட்டால், அது உறவில் நம்பிக்கையின்மை உள்ளது என்பதைக் காட்டுகிறது.ஆனால், இந்த வழக்கில் தனியுரிமை மீறல் என எங்களுக்குத் தெரியவில்லை.மேலும், இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 122 – இல் கூறப்பட்டுள்ள வாழ்க்கைத் துணையருக்கிடையிலான உரையாடல்களில் இத்தகைய பதிவு உரிமைத் தடையல்ல.சில சந்தர்ப்பங்களில், இது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்படும்.”
இந்த தீர்ப்பு, இனி வரும் விவாகரத்து மற்றும் குடும்ப வழக்குகளில், இருவருக்கிடையேயான உரையாடல் பதிவு சாட்சியாக ஏற்கப்பட முடியும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆனால், இதைச் சரியாக எந்தவிதத்தில் பயன்படுத்துவது என்பது வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The wifes secret call recordings can be used as evidence Supreme Court ruling in divorce case