ரஷ்யா–இந்தியா நெருக்கம்! பதறிப்போன டிரம்ப்.. இந்தியாவிற்கு அவசரமாக வரும் அமெரிக்க துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெளியுறவு துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் அவசரமாக இந்தியா வருகை புரிய உள்ளார். டிசம்பர் 7 முதல் 11 வரை நடைபெற உள்ள இந்த பயணம், ரஷ்யா–இந்தியா நெருக்கம் அதிகரிக்கும் நேரத்தில் நடைபெறுவதால் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

ஹூக்கர் டெல்லி மற்றும் பெங்களூரில் அரசு உயர் அதிகாரிகளைச் சந்திக்கிறார். டெல்லியில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இந்தியா–அமெரிக்க பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதேபோல் இந்தியாவின் ரஷ்ய உறவு குறித்தும் விரிவான விவாதம் நடைபெறும் எனத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரில் ஹூக்கர் ISRO, தொழில்நுட்ப மற்றும் எரிசக்தித் துறையினர் உடன் சந்தித்து விண்வெளி–ஆராய்ச்சி துறைகளில் அமெரிக்கா–இந்தியா ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளார்.

இந்தப் பயணத்திற்கான முக்கிய காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட அதிரடி வருகைதான். மோடி–புடின் சந்திப்பு, சிவப்பு கம்பள வரவேற்பு, இரு தலைவர்களின் நெருக்கமான உரையாடல் ஆகியவை மேற்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. சர்வதேச அழுத்தங்களின் நடுவிலும் இந்தியா ரஷ்யாவுடன் உறவை வலுப்படுத்துவது அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ரஷ்யா இந்தியாவுக்கு மலிவான எண்ணெய், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரிய ஆதரவு வழங்கி வருகிறது. இந்தியா–ரஷ்யா கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெறுவதால், ஆசிய அரசியல் சமநிலையில் புதிய மாற்றங்கள் உருவாகும் என்ற மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

மறுபுறம் அமெரிக்கா–இந்தியா உறவில் மோதல்கள் அதிகரித்துள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் சுங்க வரி விவகாரம், வர்த்தக முடிச்சுகள், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீது கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் கருத்து வேறுபாடுகள் திகழ்கின்றன. இந்த சூழலில் புடின் வருகை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு அரசியல் மெசேஜாகவே பல ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் சுயநிலைத்தன்மையும், ஒருதலைப்பட்ச அழுத்தங்களுக்கு அடிபணியாத நிலைப்பாடும் அமெரிக்காவை எச்சரிக்க வைத்துள்ளது. இந்தியாவின் ஆதரவைப் பெற்ற நாடுகள் உலக அரங்கில் அதிக செல்வாக்கைப் பெறும் என்பதால், ரஷ்யா–இந்தியா நெருக்கம் அமெரிக்காவிற்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

இந்த பின்னணியில் தான் அலிசன் ஹூக்கரின் அவசர இந்தியா பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் இந்த பயணத்தில் இந்தியா–அமெரிக்க உறவை மறுசீரமைப்பதற்கும், ரஷ்யா–இந்தியா கூட்டணியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்குமான அரசியல் வழிகளை ஆராய்வார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia India rapprochement Trump is worried US Deputy Secretary of State Alison Hooker is urgently arriving in India


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->