பிக் பாஸ் தமிழ் 9: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்… வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள்தான்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், கடந்த வாரம் எவரும் எலிமினேட் ஆகாததால், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு உண்மையாகி, இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் நாமினேஷன் சுற்றில், வியானா, அரோரா, ரம்யா, ஆதிரை ஆகியோர் பாதுகாப்பில் இருந்த நிலையில், 11 போட்டியாளர்கள் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். இதில் டேஞ்சர் ஜோனில் இருந்த எஃப்.ஜே, கனி, திவ்யா, அமித் பார்கவ் மற்றும் சுபிக்‌ஷா ஆகியோரில் இரண்டு பேர் குறைந்த வாக்குகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டனர்.

முதலில், வெளியேறியவர் அமித் பார்கவ். வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் வந்த அவர், ஆரம்பத்தில் ஆட்டத்தில் தீவிரமாக இருந்தாலும், பின்னர் சைலண்டாக மாறிச் சென்றார். இதனால் பார்வையாளர்களுடன் செல்லாக்காசாக மாறி, குறைந்த வாக்குகள் காரணமாக வெளியேறினார்.

இதேபோல், இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட மற்றொரு போட்டியாளர் சுபிக்‌ஷா. “மீனவ பொண்ணு சிபி” யூடியூப் சேனல் மூலம் பிரபலமான அவர், வீட்டுக்குள் நன்றாக ஆட்டமாடி வந்தாலும், நடிப்பு–டான்ஸ்–பீட் பாக்ஸ் என பல திசைகளில் மனதைச் செலுத்தியதால், போட்டியில் தெளிவான ஃபோக்கஸ் சரியாக அமையவில்லை. இதுவும் இவரை வாக்கு பலவீனத்திற்கு உள்ளாக்கி, எவிக்‌ஷன் வரிசைக்குள் தள்ளியது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திலேயே சீசன் 9 முடிவடையும் நிலையில், இந்நிகழ்ச்சியின் தரம் குறித்து பார்வையாளர்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளனர். டைட்டில் வெல்லும் அளவிற்கு தகுதியான போட்டியாளர் ஒருவரும் இன்னும் தெளிவாக உருவாகவில்லை என்றே சீசன் 9 பற்றிய மதிப்பீடு தற்போது நிலவுகிறது.

இந்த வார எவிக்‌ஷன் மூலம், போட்டி இன்னும் சமநிலை இழந்த நிலையில், அடுத்த வாரம் வீட்டுக்குள் நடக்கும் ஆட்டம் எப்படி திருப்பம் எடுக்கும் என்பதே அனைவரின் கவனமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Tamil 9 Double eviction this week These are the two contestants who were eliminated


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->