'நீட் மறுத்தேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்'; மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள தர்மேந்திர பிரதான்..!
Dharmendra Pradhan has written to the State governments stating that the NEET re examination must be conducted with integrity
எதிர்வரும் ஜூன் 21, 2026 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கோரி, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் உள்ள அனைத்து முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் பிரதான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தற்போது நிலவும் கடும் வெப்ப அலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் வசதிக்காக அத்தியாவசிய அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு, உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் தேர்வை நடத்தும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பான குடிநீர், போதுமான இருக்கை வசதிகள், செயல்படும் மின்விசிறிகள்/குளிர்விப்பான்கள், சுத்தமான கழிவறைகள், நிழலான காத்திருப்புப் பகுதிகள், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்களின் நலன்களும் நல்வாழ்வும் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வலியுறுத்திய அமைச்சர், ஜூன் 21 அன்று நடைபெறும் தேர்வு நாளன்று தேர்வர்களுக்குப் போதுமான போக்குவரத்து வசதிகளை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். நீட் 2026 மறுதேர்வு சுமுகமாகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்களும் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
Dharmendra Pradhan has written to the State governments stating that the NEET re examination must be conducted with integrity