கொடைக்கானல் செல்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; இனி வீட்டில் இருந்தே சுற்றுலா தலங்களுக்கு நுழைவுச்சீட்டு..! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுற்றுலா சென்ற ஆண்டு வரை இடங்களுக்கு அந்தந்த இடங்களில் தனித்தனியாகக் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறும் நிலை இருந்தது.

கடந்த 2026 ஜனவரி 11-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு வனத்துறையின் ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து மொபைல் செயலிகள் உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சுற்றுலா இடங்கள் மற்றும் வாகனங்களுக்குக் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது.

இதற்காக பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் வைத்து ‘க்யூஆர்’ குறியீடு மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அப்பர் லேக் வியூ ஆகிய 05 இடங்களில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.

இதனால் தற்போது பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மணிக் கணக்கில் காத்திருக்காமல் நுழைவுச்சீட்டைக் காட்டிவிட்டு சுற்றுலா இடங்களுக்குச் செல் கின்றனர்.

இந்நிலையில், நுழைவுச் சீட்டு பெறுவதை மேலும் எளிதாக்கவும் சுற்றுலாப் பயணிகள் நுழைவுச்சீட்டு எடுக்க காத்திருப்பதைத் தவிர்க்கவும், எளிதாக நுழைவுச்சீட்டு எடுக்கும் வகையிலும் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதியை கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, https:// kodaikanal wildlifesanctuary.com/ticket/book என்ற வலைதள முகவரியில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து பெயர், தேதி, சுற்றுலாப் பயணிகளில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் எத்தனை பேர், சொந்த நாட்டினரா, வெளிநாட்டினரா, எந்த வாகனத்தில் வருகிறீர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின் மொத்த சுற்று லாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம், கேமரா வைத்திருந்தால் அதற்குரிய கட்டணத்தையும் இணைய வழியில் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொடைக்கானல் வரும் நாளில் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் வனத் துறையிடம் காட்டிவிட்டு, சுற்றுலா இடங்களுக்குச் இலகுவாக செல்லலாம்.

இந்த நுழைவுச்சீட்டு 24 மணி நேரம் வரை மட்டுமே செல்லு படியாகும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை சுற்றுலா இடங்களுக்குச் செல்ல விரும்பும் தேதியைத் தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those visiting Kodaikanal can now buy entry tickets to tourist attractions from home


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->