பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் – மாப்பிள்ளை யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் சீசன் 1 மூலம் பெரும் பேசுபொருளான ஜூலி, தற்போது தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருப்பது காரணம்—அவரின் நிச்சயதார்த்தம்!

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக குரல் கொடுத்து பிரபலமான ஜூலி, அதன் பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். முதல் சில வாரங்களில் மக்கள் ஆதரவு பெற்ற அவர், ஓவியாவுடன் நடந்த மோதலுக்குப் பிறகு கடும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் சந்தித்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்தாலும், நீண்டநாள் ஸ்க்ரீன் பிரசென்ஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஜூலி அமைதியாக தனது நிச்சயதார்த்தத்தை நடத்தி, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த விழாவில், ஜூலி தனது வருங்கால கணவரின் முகத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் பகிரப்பட்ட வீடியோக்களில் ‘மெகஹரசைலா’ பாடலை பின்னணி இசையாக வைத்திருப்பதால், அவரது வருங்கால கணவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்களுடன், ஜூலி உணர்ச்சிப்பூர்வமாக,“என் உலகையே அர்த்தமுள்ளதாக்கும் மனிதனை நான் கண்டுப்பிட்டேன். நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன்தான். மோதிரம் பூட்டப்பட்டது… மனம் நிறைந்தது. அவர் யார் என்பதை பின்னர் காண்பீர்கள்… ஆனால் அவர் சரியானவர் என்பதை இப்போது அறிந்து கொள்ளுங்கள்”என பதிவு செய்துள்ளார்.

விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஜூலியின் புதிய வாழ்க்கை தொடக்கத்தை பலரும் மனமார வாழ்த்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Julie is engaged do you know who the groom is


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->