விண்வெளியிலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா..இன்று மாலை தரையிறங்கல்!
Subhanshu Sukla successfully launched from space landing scheduled for this evening
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான ஆக்சியம்-4 குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கள் முக்கியமான ஆய்வுப் பணிகளை முடித்தவுடன், டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 4.45 மணியளவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் இருந்து, சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன் (அமெரிக்கா), திபோர் கபு (ஹங்கேரி), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்து) ஆகியோர் வெளியேறினர். இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 25ம் தேதி புளோரிடா நாசா மையத்திலிருந்து புறப்பட்டு, 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்தனர்.
இந்நேரத்துக்குள் அவர்கள் 60க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 7 முக்கிய சோதனைகள் அடங்கியிருந்தது.
இந்த வெற்றிகரமான பணி முடிந்து, டிராகன் விண்கலம் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையக்கூடியது. அதன் வேகம் மணிக்கு 27,000 கிமீ ஆகும். 5.5 கிமீ உயரத்தில் சிறிய பாராசூட்டுகள் திறக்கப்படுவதே தொடக்கமாக, பின்னர் 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து, பிற்பகல் 3 மணியளவில் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா அருகே தரையிறங்க உள்ளனர்.
தரையிறங்கிய பத்து நிமிடங்களுக்குள் ஸ்பேஸ் எக்ஸ் மீட்புக் கப்பல் குழு அவர்கள் இருக்கும் விண்கலத்தை அடைந்து, மருத்துவ பரிசோதனைக்காக மீட்கவுள்ளனர். பின்னர் அனைவரும் வாண்டன்பெர்க் விண்வெளி தளத்துக்கு அழைத்து செல்லப்படுவர்.
சுபான்ஷு சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம், இந்தியா சார்பில் ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால மனிதர்கள் செல்லும் விண்வெளி பணி முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தொடக்கமாக அமைந்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இருவரும் இந்த பயணத்தை மகிழ்ச்சி மற்றும் பெருமையின் அடையாளமாக பாராட்டியுள்ளனர்.
English Summary
Subhanshu Sukla successfully launched from space landing scheduled for this evening