மாரடைப்பால் கணவர் உயிரிழப்பு..கதறி துடித்த மனைவி! - Seithipunal
Seithipunal


சென்னையில் மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த  புதுமாப்பிள்ளை  திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

29 வயதான மெல்வின், சென்னை மந்தைவெளி எஸ்.பி.ஐ. குடியிருப்பில் வசித்து வந்தார். எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஒரு மாதத்திற்கு முன்னர் காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

விடுமுறை தினமான நேற்று, தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கேளம்பாக்கம் வணிக வளாகத்துக்கு சென்றனர். அங்கு சுற்றியழிந்து, பின்னர் அதே வளாகத்தில் உள்ள தியேட்டரில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தனர்.

திரைப்படம் நடந்து கொண்டிருந்தபோது, மெல்வினுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்ட மனைவி காயத்ரி, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கணவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள், மெல்வின் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த தகவலை கேட்டு மனைவி காயத்ரி துடித்துக் கதறினார். பின்னர், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மெல்வினின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

துமெல்வின் மாரடைப்பால் உயிரிழந்ததா, அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் வணிக வளாகத்திற்கு சென்றபோது எந்த உணவு சாப்பிட்டார் ?உணவு பாதிப்பு ஏற்பட்டதா?முன்னதாக உடல்நலக்குறைவு இருந்ததா?என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband dies of heart attack a wife weeps inconsolably


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->