ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்துங்கள்...! - மத்திய பாதுகாப்பு அமைச்சகம் - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 'மத்திய பாதுகாப்பு அமைச்சகம்', எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம்:

அதில் குறிப்பிட்டதாவது,"பாதுகாப்பு வீரர்களை பின்தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனி நபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் காண்பித்தால் வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தேசத்தின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மும்பை தாக்குதல், விமானக் கடத்தல், கார்கில் போர் சமயங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Army personnel need protection Stop live broadcasting Union Ministry of Defence


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->