போர் பதற்றம் - திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.!
5 layer security in trichy airport
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகளுடன் போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

பயணிகளின் ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவியின் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் ஏப்ரான் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று விமானத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை வருகிற 18-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
5 layer security in trichy airport