ஓமனில் பிரதம மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!
Prime Minister Modi receives a red carpet welcome in Oman
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையேயும் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று ஓமன் சென்றுள்ளார். அங்கு ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அழைப்பை ஏற்று, அவர் அங்கு சென்றுள்ளார். ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தரையிறங்கினேன். இது இந்தியாவுடன் நீடித்த நட்பு மற்றும் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம். இந்த வருகையானது இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi receives a red carpet welcome in Oman