புகார் மீண்டும் கமிஷனர் அலுவலகம் வரை...! மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் ஜாய் கிரிசில்டாவின் புதிய திருப்பம்...!
complaint comes back Commissioners office Joy Crisildas new twist Madhampatti Rangaraj case
இந்த சூழலில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுக்கே சொந்தமானது என்றும், இதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஜாய் கிரிசில்டா மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், தாம் தற்போது வசித்து வரும் வீட்டின் ஒப்பந்தம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும், தன்னுடைய இரு குழந்தைகளின் பராமரிப்புக்காக அவசரமாக நிதி உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் போலீசார் உடனடியாக தலையிட்டு, விரைந்து நியாயமான தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் புகார்கள், விவகாரத்தை மேலும் தீவிரமான கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
English Summary
complaint comes back Commissioners office Joy Crisildas new twist Madhampatti Rangaraj case