ரூ.60 கோடி மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா தம்பதியர் மீது EOW வழக்கு பதிவு - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது எழுந்துள்ள ரூ.60 கோடி மோசடி குற்றச்சாட்டு திரையுலகிலும் வணிக உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் (EOW) முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, தொழிலதிபர் தீபக் கோத்தாரி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனது ரூ.60 கோடியை திரும்பப் பெற அமலாக்க இயக்குநரகம் (ED) முன் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் குற்றம்சாட்டப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

புகாரின் படி, ‘பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட்’ என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா தம்பதியர், 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் கோத்தாரியை ரூ.60.48 கோடி முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த முதலீட்டு தொகை நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல், தனிப்பட்ட தேவைகளுக்காக திருப்பிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் திரையுலகில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

60 crore fraud complaint EOW case registered against Shilpa Shetty Raj Kundra couple


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->