முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ பெயர் சூட்டிக்கொண்ட ரெஜினா கசாண்ட்ரா – என்ன காரணம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகை ரெஜினா கசாண்ட்ரா கிறிஸ்தவர் என பலரும் நினைத்து வந்த நிலையில், உண்மையில் அவர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் என்பதைக் குறித்து அவரே வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினாவின் தந்தை முஸ்லிம், தாய் கிறிஸ்தவர். பெற்றோருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து நடந்ததைத் தொடர்ந்து, ரெஜினா தாயுடன் வாழத் தொடங்கினார். தாய் கிறிஸ்தவர் என்பதால், அவர் ஞானஸ்நானம் பெற்று ரெஜினா கசாண்ட்ரா என்ற பெயரை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதாகவும், எந்த மத அடையாளமும் தனக்குள் வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை என்றும் ரெஜினா கூறியுள்ளார். உளவியலில் பட்டம் பெற்றுள்ள அவர், மனித மனதைப் புரிந்துகொள்ளும் அந்த கல்வி தனது வாழ்க்கையிலும், நடிகையாக கதாபாத்திரங்களை அணுகுவதிலும் உதவியாக இருப்பதாக விளக்கினார்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ரெஜினா, யோகா மற்றும் ஜிம் பயிற்சிகளை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடித்து வருகிறார். மன அழுத்தம், மனநலம் குறித்து வெளிப்படையாக பேசுவதிலும் அவர் தயங்குவதில்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ரெஜினா, விலங்குகள் மீது ஆழ்ந்த பிரியம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். தற்போதைய காலகட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தாலும், ஃபர்ஸி போன்ற வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டு திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Regina Cassandra who was born into a Muslim family and given a Christian name do you know the reason


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->