"மானத்தை வாங்கும் ஸ்டாலின் அரசு.?" குமுறும் தமிழக பெண்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். படிக்க தெரியாத பெண்களும் அதில் பயன்பெற வேண்டுமென பேருந்தில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது.

பெண்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த  திட்டம் பயனுள்ளதாக பார்க்கப்பட்டாலும் நடைமுறையில் பல இடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலவச மகளிர் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை இலவசமாக பயணிக்கிறார்கள் என அவமானப்படுத்துவதும் காசு கொடுக்காமல் பயணிக்கிறார்கள் என மகளிர் இருக்கைகளையும் ஆண்கள் ஆக்கிரமித்த அமருவதும் தற்போது தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் கட்டிட வேலைக்கு சென்று  திரும்பிய பெண்கள் பெண்களுக்கான சிறப்பு இலவச பேருந்தில் ஏறும் போது  அவர்களை  தடுத்து ஏற்படாமல் 'ஓசி டிக்கெட்டு' என்று  நடத்துனர் ஒருமையில் பேசி அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டுமான பணிக்கு சென்று விட்டு பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் குறிஞ்சிப்பாடி கிராமம் செல்லும் பேருந்தில் ஏற முற்பட்ட போது பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை சுட்டிக்காட்டும் வகையில் 'ஓசி டிக்கெட்' என்று கூறி தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தற்போது பெண்கள் பேசும் வீடியோ ஒன்று பரபரப்பை அதிர்ச்சியை வேறுபடுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore a govt bus conductor abuse women fortraveling in special previlages


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->