சொத்து பிரச்சனையில் மகனுக்கு அரிவாள் வெட்டு - மன்னார்குடி அருகே தந்தை கைது.!!
man arrested for kill son in thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு என்ற பால கிருஷ்ணன். ஒப்பந்ததாரரன இவருக்கு, அரவிந்த மோகன், அருள் மோகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், பாலு குடும்பத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சொத்து குறித்த பாகப் பிரிவினை நடைபெற்றது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை பாலு, அரவிந்த மோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்தத் தகராறைத் தடுக்க முயன்ற தாயார் பவானி, அரவிந்த மோகனின் மனைவி ஜெயப்பிரதா இருவரும் காயமடைந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த அரவிந்த மோகனை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரவிந்த மோகனின் மனைவி அளித்த புகாரின் பேரில், தந்தை பாலு மீதும், சகோதரர் அருள் மோகன் மீதும் கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, பாலு நேற்று மதியம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் தனது மகனை கொலை செய்தது தொடர்பாக சரணடைந்தார்.
English Summary
man arrested for kill son in thiruvarur