குத்தம்பாக்கம் பேருந்து முனையம் முடிவுறும் நிலையில் பணிகள்..அமைச்சர் சேகர்பாபு தகவல்!
Work is nearing completion at Kuthambakkam bus terminus Minister Sekar Babus update
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், ரூ.34.90 இலட்சம்மதிப்பில்பெரம்பூர் நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குமையக் கட்டடத்தினை இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப்
பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாமன்றஉறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.34.90 இலட்சம் மதிப்பில் திரு.வி.க.நகர் மண்டலம்,வார்டு-71, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கில் ராஜீவ் காந்தி பூங்கா அருகில் பெருநகரசென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினைபயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, குழந்தைகள் மையத்தின் செயல்பாட்டினைத்தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நிதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கும், கல்விக்கும், மழலைச் செல்வங்கள் பயன்பெறுகின்ற
வகையில் இந்த குழந்தைகள் மையங்களுக்கும் பெருமளவிற்கு மக்கள் பயன்பாட்டிற்குஇந்த நிதிகள் பயன்படுத்தப்பட்டு, இன்று இந்த குழந்தைகள் மையக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டு, இங்குள்ள குழந்தைகளுக்கு தேவையான பொருட்களும்வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் முடிவுறும்நிலையில் உள்ளது. மாமல்லபுரத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம் மற்றும்செங்கல்பட்டில் ரூ.200 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு பேருந்து நிலையம்கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் தைத்திங்களில் பயன்பாட்டிற்குக்கொண்டு வர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதுமட்டுமில்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 13 MTC பேருந்துநிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் அம்பத்தூர், முல்லை நகர்,உதயசூரியன் நகர் ஆகிய 3 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு, இந்த மாத (அக்டோபர்)இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
திறந்து வைக்கவுள்ளார்கள். இதில் அம்பத்தூர் பேருந்து நிலையம் முத்தமிழறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது
புனரமைக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகும். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் திருமதி. ஆர்.பிரியா, திரு.வி.க நகர் சட்டமன்ற
உறுப்பினர் திரு.தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர்
திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திருமதி.சரிதா மகேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர் திருமதி.புனிதவதி எத்திராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர்உடனிருந்தனர்.
English Summary
Work is nearing completion at Kuthambakkam bus terminus Minister Sekar Babus update