ஷாங்காய்-டில்லி இடையே நேரடி விமான சேவை: மீண்டும் தொடங்கும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்..!
China Eastern Airlines resumes direct flight service between Shanghai and Delhi
கடந்த ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசினர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே உறவு சுமூக நிலையில் இருக்கிறது. இந்நிலையில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் வரும் நவம்பர் 09 முதல் ஷாங்காய்-டில்லி இடையே நேரடி விமானங்களை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்கவுள்ளது.
இது இந்தியா-சீனா உறவுகளை மேம்படுத்துவதன் அடுத்த படியாக அமைந்துள்ளது. இந்த விமான சேவை, வாரத்திற்கு மூன்று முறை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து மதியம் 12:50 மணிக்குப் புறப்படும் இந்த பயணம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 05:45 மணிக்கு டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
அதேபோல் டில்லியில் இருந்து இரவு 07:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04:10 மணிக்கு ஷாங்காய் புடாங்கில் தரையிறங்குகிறது. இந்த வழித்தடத்திற்கான டிக்கெட்டுகள் இப்போதே முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
China Eastern Airlines resumes direct flight service between Shanghai and Delhi