அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழா..நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
AIADMKs 54th anniversary celebration Welfare assistance distributed amid festivities
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சி பொன்னையன், பி.வி. ரமணா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், முன்னாள் எம்பியும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான எம்.சி.தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.
இதில் கழக பேச்சாளர்கள் நா.ராசகோபால், கே.கே.மூர்த்தி, இளம் பேச்சாளர் எஸ்.டில்லிபாபு ஆகியோர் கலந்து கண்டு அதிமுக அரசு துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நடைபெற்ற அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.அதிமுக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லியும், திமுக அரசின் கையாலாகாத தனத்தை எடுத்துச் சொல்லியும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசும் போது தெரிவித்தார்.
மேலும் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடங்கியதால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் அஇஅதிமுக தொடங்கிய பிறகு 1977 முதல் 1987 வரை 11 ஆண்டுகள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராகவும், தொடர்ந்து 1991 முதல் 1996 வரையும், 2001 முதல் 2006 வரையும், 2011 முதல் 2016 வரை என புரட்சித்தலைவி அம்மாவும் அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆட்சி செய்து பல்வேறு சாதனைகளை படைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பேசும்போது தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
English Summary
AIADMKs 54th anniversary celebration Welfare assistance distributed amid festivities