அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…3 நாள் குழந்தை கடத்தல் பரபரப்பு! - 8 மணி நேரத்தில் காவலர்கள் அதிரடி மீட்பு! - Seithipunal
Seithipunal


திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை ‘தடுப்பூசி போட வேண்டும்’ என நம்பிக்கை ஏற்படுத்தி, மர்ம பெண் ஒருவர் சாமர்த்தியமாக மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்றார்.

மேலும், குழந்தை காணாமல் போனது தெரியவந்ததும் பெற்றோர் கதறி அழுத நிலையில், உடனடியாக காவலில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட காவலர்கள் சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் விரைவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதின் அதிரடி நடவடிக்கையாக, துறையூர் அருகே அந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்ட , காவலர்கள் கடத்தலில் தொடர்புடைய பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெறும் 8 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்ட காவலர்களின் துரித நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock government hospital 3day child abduction stir Police rescue 8 hours


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->