சீருடையில் இருந்துகொண்டு இந்த அநாகரிகமா...? கோவையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலருக்கு விழுந்த தக்க நடவடிக்கை என்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


கோவையில் இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், சம்பவத்தின்போது அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் மீதும் துறைத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வினோத்குமார் (35) என்ற காவலர், கடந்த 15-ஆம் தேதி இரவு சக காவலர்களுடன் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய இரண்டாம் கட்ட வளைவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அங்கு நின்று கொண்டிருந்ததை கண்ட காவலர்கள், இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இளம்பெண்ணை தனியாக விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்ற வினோத்குமார், பின்னர் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறி தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்பித்து தனது ஆண் நண்பரிடம் சென்று நடந்த சம்பவத்தை கதறி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, இளம்பெண்ணின் ஆண் நண்பர் காவல்துறை உயரதிகாரிகளை நேரில் சந்தித்து விரிவான புகார் மனுவை அளித்தார்.புகாரின் அடிப்படையில், காவலர் வினோத்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை காவலர்கள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற நாளில் வினோத்குமாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்களின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களும் தங்களது கடமையில் அலட்சியம் காட்டியதாக கருதப்பட்டதால், அவர்கள் மீதும் துறைத்தர ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know what action should be taken against policeman who harassed young woman Coimbatore


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->