3rd ODI; ரோஹித்தின் அதிரடி சதம் வீண்; இந்தியாவை 27 ரன்களில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து..!
England beat India by 27 runs in the 3rd ODI to clinch the series
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. தொடரை 2:1 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பாக பென் டக்கெட் அபாரமாக ஆடி, 141 ரன்களும், பெத்தல் 91 ரன்களும், ஜோ ரூட் 74 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் வெறும் 13 பந்துகளில் 41 ரன்கள் என அபாரமாக ஆடினார்.

இறுதியில் 50 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது. அடுத்து 388 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 138 ரன்களும், சுப்மன் கில் 77 ரன்களும், விராட் கோலி 74 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி சார்பாக சாம் கர்ரன் 04 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஜேக்கப் பெத்தல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக சதம் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்கள் காரணமாக நீக்கம், ஓய்வு வதந்திகள் கிளம்பிய நிலையில், 12 பவுண்டரிகள், 04 சிக்சர்களுடன் 34 வது ODI சதம், இங்கிலாந்து மண்ணில் 08வது சதம் பதிவு செய்து மீண்டும் தன் திறனை நிரூபித்துள்ளார்.
English Summary
England beat India by 27 runs in the 3rd ODI to clinch the series