ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து; "இது ஒரு வரலாற்று சாதனை'' என பிரதமர் மோடி பாராட்டு..! - Seithipunal
Seithipunal


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2026 தொடரில், உலக சாம்பியன் யமகுச்சியை வீழ்த்தி, இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பி.வி.சிந்து பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 03 முறை உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று பின்னடைவை சந்தித்தாலும், மீண்டெழுந்த பி.வி.சிந்து 21-க்கு 17, 21-க்கு 17 என்ற கணக்கில் யமகுச்சியை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், ஜப்பான் ஓபனை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த பி.வி.சிந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளார். 2019-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, உலகளவில் மிகப்பிரபலமான ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து கோப்பை வென்றுள்ளார்.

சாம்பியன் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது;

"இந்திய பேட்மிண்டனுக்கு இது ஒரு வரலாற்று சாதனை. ஜப்பான் ஓபன் 2026 தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவரது உறுதியும், அபாரமான திறமையும் வெளிப்பட்டது. இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை, இந்த வெற்றியை மேலும் சிறப்பாக்குகிறது. சிந்துவின் இந்த சாதனை, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டில் சாதிக்கவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ஊக்கமளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்தப் பதிவுக்கு நன்ற பிவி சிந்து நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது;

''மிகவும் நன்றி, மாண்புமிகு பிரதமர் அவர்களே. உங்கள் வாழ்த்துகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு உங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்ட அந்த தருணத்தையும், உங்கள் அலுவலகத்தில் நடந்த அந்த சிறிய உரையாடலையும், அதற்கு முன்பும் பின்பும் உங்களை சந்தித்து உங்களிடம் இருந்து ஊக்கம் பெற்ற பல தருணங்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவை அனைத்தும் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத இனிய நினைவுகளாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi congratulates PV Sindhu for winning the Japan Open Badminton 2026 championship


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->