'இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தனி அணியாக போட்டியிடும்'; பெ. சண்முகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தனி அணியாக செயல்படுவதென தீர்மானித்துள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது;

இடதுசாரிகளால் தான் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும், கர்நாடகா தண்ணீர் திறந்து விடாத நிலையில், ஏற்கனவே பற்றாக்குறை தண்ணீர் பகிர்வு குறித்து உச்சநீமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையில் தமிழகத்திற்கான தண்ணீரை பெற தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையமும் தண்ணீர் பெற்று தர ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், நாகர்கோவில் சபரிவர்மன் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், கைது நடவடிக்கை நடந்துள்ளது. அதனால் சிபிஐ வந்து எதையும் புதிதாக கண்டுபிடிக்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இக்குற்றத்தில் அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும், இந்த மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டுமென முதல்வரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். எக்காரணம் கொண்டும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Shanmugam announces that the Left will contest the by elections as a separate team


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->