நாகாலாந்து மோன் மாவட்டத்தில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 08 பேர்உயிரிழந்தனர். இதுவரை 04 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன், நிலச்சரிவுக்குப் பிறகு அந்தப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் புகுந்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சம்பவ இடத்தில் தன்னார்வலர்கள், காவல் துறை, ராணுவத்தினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவு துயர சம்பவத்திற்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 04 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 74,000-மும் உடனடி நிவாரணமாக அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 07 பேரைக் காணாமல் போய்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 people killed in landslide in Nagalands Mon district


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->