சமணர் படுகையிலேயே படுத்துப் பார்த்த அமைச்சர்...! மதுரையில் தொல்லியல் துறையினரையே வியக்க வைத்த அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி ஆய்வு...! - Seithipunal
Seithipunal


மதுரை அருகேயுள்ள மீனாட்சிபுரம் (மாங்குளம்) கிராமத்தில் அமைந்துள்ள சங்ககால வரலாற்றுச் சின்னமான சமணர் கற்படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் மற்றும் சமண முனிவர்கள் பயன்படுத்திய கற்படுக்கைகளின் அமைப்பை நுணுக்கமாக அறிந்துகொள்ளும் நோக்கில், அமைச்சர் ராஜ்மோகன் தாமே கற்படுகையில் படுத்து கல்வெட்டுகளை உன்னிப்பாக ஆராய்ந்தார்.

வரலாற்றின் உண்மைத்தன்மையை நேரடியாக உணர்ந்து மேற்கொண்ட இந்த ஆய்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.அமைச்சர் கற்படுகையில் படுத்தபடி கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் காட்சிகள் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு பரவலான கவனத்தை பெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து தொல்லியல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், சங்ககால பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த அரிய வரலாற்று தளத்தை முழுமையாக பாதுகாக்கவும், அதன் தொன்மை பாதிக்கப்படாத வகையில் பராமரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உலகத் தரத்திலான பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இந்த வரலாற்றுச் சின்னத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் வகையில், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister who lay down chaplain bed Minister Rajmohan groundbreaking research Madurai surprised even archaeologists


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->