'கால்சீட் தரவேண்டும் அல்லது ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்'; நடிகர் தனுஷ்-க்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ்..!
A famous production company has served a notice to actor Dhanush demanding compensation for a loss of Rs 20 crores
தமிழ் திரை உலகில் அறிமுகமாகி பல வெற்படங்களை கொடுத்துள்ளவர் நடிகர் தனுஷ். தற்போது இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் இயக்குனர். பாடகர், பாடலாசியர் என பல்வேறு பரிமாணங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படமான Tere Ishk Mein மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, திரைப்பட ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் தனுஷ் முடிவு எடுக்காததால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று கோரியுள்ளது.
அதாவது, தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 'ருத்ரன்' திரைப்படத்திற்கு கால்சீட் கொடுக்காமல் பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் படம் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும், கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary
A famous production company has served a notice to actor Dhanush demanding compensation for a loss of Rs 20 crores