பீகார் தேர்தல்: ராம் விலாஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு: அதிர்ச்சியில் பாஜக கூட்டணி..!
Ram Vilas candidates nomination rejected in Bihar elections
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் மாதம் 06 மற்றும் 11 ஆம் தேதிகளில் இது கட்டமாக நடைப்பெற்ற, வாக்கு எண்ணிக்கை 14 ஆம் எண்ணப்பட்டு முடிவுகளும் அதே நாளில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால், மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பீகார் மர்ஹௌரா தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ஹௌரா தொகுதியில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடுகள் உள்ளதாக காரணம் காட்டி தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்.

எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் ஒரு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பீகார் தேர்தலில் பாஜக மற்றும் ஜேடியு கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றது. அதில், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களில் போட்டியிடுகிறது. உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) மற்றும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ram Vilas candidates nomination rejected in Bihar elections