பெண்களை பாதுகாக்கத் தவறிய திமுக அரசு! தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்த பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிவிப்பில், "திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் அதிகரித்து, நாடெங்கும் தலைவிரித்தாடுகிறது.

இத்தகைய குற்றங்களை தடுத்து, பெண்களை பாதுகாக்கத் தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரும் மார்ச் 15-ந் தேதி, மாலை 4 மணியளவில் "பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" மாவட்டம்தோறும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவிருக்கும் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும், அனைத்து அணிகள், மற்றும் பிரிவுகள் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கும், இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn bjp protest announce dmk govt law and order


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->