கும்பமேளா மூலம் பிரபலமான மோனலிசாக்கு காதலருடன் கேரளா கோவிலில் திருமணம்! கண்கலங்கி நின்ற மோனலிசா! - Seithipunal
Seithipunal


கும்பமேளா நிகழ்வின் போது சமூக வலைதளங்களில் பிரபலமான மோனலிசா (மோனி போஸ்லே) தற்போது தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்பத்தினரின் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி சென்ற இந்த ஜோடி, இறுதியில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசாவுக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பர்மான் கானுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவுக்கு மோனலிசாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவின் பூவார் பகுதிக்கு வந்திருந்த மோனலிசா, தனது காதலருடன் சேர்ந்து திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தார். குடும்பத்தினரால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் போலீசிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் மோனலிசாவின் தந்தை ஜெய் சிங் போஸ்லேவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மோனலிசாவும் பர்மான் கானும் இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணத்திற்கு தடையிட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் மாலை மாற்றி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது பர்மான் கான், மோனலிசாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மணமுடித்த தருணத்தில் அவர் கண்கலங்கியதாக கூறப்படுகிறது.

கும்பமேளா நிகழ்வின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான மோனலிசா தற்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், அவரது காதல் திருமணம் வெற்றியடைந்ததற்காக ரசிகர்களும் சில சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monalisa who became famous through Kumbh Mela got married to her lover in a Kerala temple Monalisa stood in awe


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->