சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் இல்லை! ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன்! அப்புறம் தான் புரிஞ்சது– மனம் திறந்த சமந்தா - Seithipunal
Seithipunal


சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, சினிமா வாழ்க்கை குறித்த தனது புதிய பார்வையை பகிர்ந்துள்ளார். பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து இன்று வரை ரசிகர்களின் விருப்ப நட்சத்திரமாக திகழும் அவர், தற்போது முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, சினிமாத் துறையில் தனது பயணம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

“முன்பெல்லாம் சினிமா என்பது ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி என்று நினைத்தேன். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்; இறுதிவரை சென்று வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். உண்மையில், இங்கே அப்படி ஒரு பந்தயமே கிடையாது. நாம் ஓடிச் சென்று பிடிக்க வேண்டிய எல்லைக்கோடு என்பதே இல்லை என்பதை மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

‘எங்கள் தங்கம்’ திரைப்படம் சமந்தாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இந்தப் படத்தை அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘தி ஃபேமிலி மேன்’ தொடருக்குப் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டி.கே. இந்தப் படத்திற்கான கதையை உருவாக்கியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் சமந்தாவுடன் ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையுலகில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கான ஓட்டத்தைத் தாண்டி, தனக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும், அதில் ஆத்மதிருப்தி அடைவதுமே உண்மையான வெற்றி என்பதை சமந்தா தனது பேச்சின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஜூன் 19-ஆம் தேதி வெளியாகும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமந்தாவின் இந்த தன்னம்பிக்கை நிறைந்த கருத்துகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema isnot a race I kept running driven by the need to win Only then did I realize Samantha opens up


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->