4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; காதல் கணவரை விவாகரத்து செய்த நடிகை ஹன்சிகா..!
Actress Hansika divorces her husband
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்.இதனுடன் ஹன்சிகாவின் 04 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.
இந்நிலையில் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடிகை ஹன்சிகா அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்று தன்னுடைய கணவரை பிரிந்துள்ளார். இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹன்சிகா - சோஹைல் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்த விவாகரத்து வழக்கில் நடிகை ஹன்சிகா ஜீவனாம்சம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் ரவி மோகனின் ‘எங்கேயும் காதல்’, உதயநிதி ஸ்டாலினின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.
English Summary
Actress Hansika divorces her husband