உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா...! எதற்கான ஆலோசனை...? - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அறவே அழித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி ''டிரோன் மற்றும் ஏவுகணை'' தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், பாகிஸ்தான் எல்லையில் அருகிலுள்ள மாநிலங்களில் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் எல்லை மற்றும் விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிஸ்எஃப், சிஐஎஸ்ஃப் டைரக்டர் ஜெனரல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து உளவுத்துறை இயக்குனருடன் ஆலோசனை நடத்தினார்.இதில் எல்லை பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், பொது மக்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Home Minister Amit Shah with top officials Advice


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->