மலேசியாவிலும் கைதி கதை! – ‘BANDUAN’ ரீமேக் வெளியீட்டுக்கு முன் சிறப்பு விருந்தினராக மலேசியாவில் கார்த்தி...! - Seithipunal
Seithipunal


மாநகரம், மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி மரியாதை பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த ‘கைதி’ (2019) திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, க்ரிட்டிக்கல் ஹிட்டாக அமைந்தது.

அதன் திரைப்பதிப்பு, தீவிரமான கதை மாந்தர்கள், கமர்ஷியல் இல்லாத நிஜ உணர்வுகள் ஆகியவை அந்தப் படத்தை ரசிகர்களின் நினைவில் நிலைத்தவாறு செய்தன.அந்த வெற்றியின் பின்னணியில், ‘கைதி 2’ குறித்து பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், அந்தப் படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி பாராட்டுகளை பெற்றது. தற்போது, மலாய் மொழியில் ‘கைதி’ கதை மீண்டும் உயிர் பெறுகிறது.மலேசியாவில் உருவாக்கப்பட்ட ‘BANDUAN’ எனும் இந்த மலாய் ரீமேக் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் மலேசிய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.இதையடுத்து, அந்த ரீமேக் படத்தின் சிறப்புத் திரையிடல் விழா இன்று மலேசியாவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் கார்த்தி நேரடியாக மலேசியா சென்றுள்ளார்.நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘BANDUAN’ படத்தின் கதாநாயகனுடன் கார்த்தி நேரில் சந்தித்து உரையாடியதோடு, நினைவாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prisoner story Malaysia too Karthi special guest Malaysia before release BANDUAN remake


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->