மீண்டும் மீண்டும் பணம் மோசடிகள் மாட்டிக்கொள்ளும் மக்கள்...! புதுச்சேரியில் அரங்கேறிய சம்பவம்...
People caught money scams again and again Incident Puducherry
புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் இணையத்தின் மூலம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க சைபர் கிரைம் காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இருந்தாலும், மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை அப்பாவி மக்களிடம் காட்டி வருகின்றனர்.

இதில், மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ''ஆன்லைன் மோசடி'' கும்பல் ஆசை வார்த்தை தெரிவித்தனர்.
இதில்,ரூ.28000 முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1,00,800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர்.
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்,மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவலில் புகார் செய்துள்ளனர். இதனை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
People caught money scams again and again Incident Puducherry