லேடிஸ் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத 'லேடி சூப்பர் ஸ்டார்' - ஸ்ரீரெட்டி குமுறல்!
Sri Reddy condemn to Nayanthara
நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக “சினிமாவில் முன்னேற விரும்பும் ஒருவர், பல சமயங்களில் சில தவிர்க்க முடியாத பாதைகள் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
‘மீ டூ’ குறித்து நான் பேசும் போதும், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட தைரியமாக குரல் கொடுக்கவில்லை.
போதைப்பொருள் சம்பவங்களில் கூட அவர்கள் மௌனம் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு தொழில், பணம், புகழ் முக்கியம், சமூகப் பொறுப்பு அல்ல” என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மேலும், “புதிய நடிகைகள் எந்த பெரிய புள்ளிகளுடன் சண்டையில் இறங்க வேண்டாம். பிரச்சனைகள் இருந்தாலும் வெளியே சொல்ல வேண்டாம்; பதிலாக அங்கிருந்து விலகுங்கள்.
நான் திரையுலகில் நடக்கும் சிக்கல்களை வெளிப்படையாக பேசியதால்தான் வாய்ப்புகள் இல்லாமல் வாடுகிறேன். அதனால், நான் ‘யூடியூப்’ சேனல் தொடங்கினேன். சமையல் வீடியோக்களில் கவர்ச்சியை பயன்படுத்துகிறேன். அது எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே தற்போது எனக்கு வருமானத்தைக் கொடுத்து வருகின்றது,” என்றார்.
English Summary
Sri Reddy condemn to Nayanthara